வென் டே ப்ரேக்ஸ்
-சுரேஷ்வரன்-
செர்பியாவின் தற்காலப் பதட்டத்திற்கானக் காரணிகளைத் தனது படைப்புக்களின் வாயிலாக அழுத்தமாகப் பதிவு செய்பவர் கோரன் (Goran Paskaljevic). கொலை, கொள்ளை, வன்முறை, செக்ஸ் என்ற அவரது முந்தைய கதைக்களங்களிலிருந்து மாறுபட்டு வெளிவந்திருக்கிற அவரது தற்போதைய படைப்பு When Day Breaks ! இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நாஜிக்களால் இனப்படுகொலைக்கு ஆளான யூதர்கள், நாடோடிகள், மற்றும் அரசியல் கைதிகளின் நினைவாக, அவர்களுக்கான அஞ்சலியாக, இத்திரைப்படத்தை எடுத்திருப்பதாகக் கோரன் கூறுகிறார்.
-சுரேஷ்வரன்-
செர்பியாவின் தற்காலப் பதட்டத்திற்கானக் காரணிகளைத் தனது படைப்புக்களின் வாயிலாக அழுத்தமாகப் பதிவு செய்பவர் கோரன் (Goran Paskaljevic). கொலை, கொள்ளை, வன்முறை, செக்ஸ் என்ற அவரது முந்தைய கதைக்களங்களிலிருந்து மாறுபட்டு வெளிவந்திருக்கிற அவரது தற்போதைய படைப்பு When Day Breaks ! இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நாஜிக்களால் இனப்படுகொலைக்கு ஆளான யூதர்கள், நாடோடிகள், மற்றும் அரசியல் கைதிகளின் நினைவாக, அவர்களுக்கான அஞ்சலியாக, இத்திரைப்படத்தை எடுத்திருப்பதாகக் கோரன் கூறுகிறார்.
மிசா, ஓய்வு பெற்ற இசைப் பேராசிரியர். ஜூவிஸ்
மியூஸியத்திலிருந்து அவருக்கு ஒரு அழைப்பு வருகிறது. கட்டுமானப் பணியின் பொருட்டு நிலத்தைத் தோண்டியபோது கிடைக்கப்பெற்ற ஒரு சிறு இரும்புப்பெட்டி மிசாவுக்குரியது என்று அவரிடம் சேர்க்கப்படுகிறது.
அதன்வழி அவரது வாழ்க்கையில் ஒரு பெருந்திருப்பம் நிகழ்கிறது. ஒரு கடிதம், ஒரு புகைப்படம் மற்றும் முடிக்கப்படாத இசைக்கோர்வைக் குறிப்பு ஒன்று என அப்பெட்டியில்
இருக்கின்றன. அவை வழி அவர் குறித்த எழுபதாண்டு இரகசியம் ஒன்று உடைபடுகிறது. மிசாவின் உண்மையான பெற்றோர் 1941 ஆம் ஆண்டில் செர்பியாவின் தற்போதைய பெல்கிரேடு பகுதியில் இருந்த நாஜிக்களின் பெருவதை முகாமில் இனப்படுகொலைக்கு ஆளானவர்கள் என்று
! மிசா அதனை மறுக்கிறார். ‘’அது சொல்லும் வாழ்க்கை வேறு யாரோ ஒருவருடையது. எனதில்லை’’
என்கிறார். இருந்தும் அக்கொடுங்கால கட்டத்திலிருந்து மீண்டு இன்னமும் உயிரோடு இருப்பவர்களைச்
சந்தித்து தனது பிறப்பு குறித்த குழப்பத்தைத் தீர்த்துக்கொள்ள முயல்கிறார். அவ்வகையில்,
‘அவரது உண்மையான
தந்தையார் ஒரு இசைக் கலைஞர்,
வதைமுகாமில் படுகொலைக்கு ஆளானவர்களே அவரது பெற்றோர்கள்’ என்பதை அறிய வருகிறார். அவரது தந்தையின்
முடிக்கப்பெறாத இசைக்குறிப்பே When Day Breaks என்பது
!
ஆயிரக்கணக்கான யூதர்கள், நாடோடிகள், மற்றும் அரசியல் கைதிகள் படுகொலைக்கு ஆளான அப்பெருங்குரூரத்தை தன்நாட்டு மக்கள் முற்றிலும் மறந்துபோயிருப்பது மிசாவுக்கு பெருத்த அதிர்ச்சியளிக்கிறது. தனது தந்தைக்குச் செலுத்தும் அஞ்சலியாக அந்த முற்றுப்பெறாத இசைக்கோர்வையை முழுமைப்படுத்தி அவ்விசையை முதல் முறையாக முன்னர் வதைமுகாம் இருந்த அதே இடத்தில் அரங்கேற்ற முனைகிறார் மிசா ! அவ்வழியில் மரபிலிருந்து தன்னை முற்றாகத் துண்டித்துக்கொண்ட நவீனப்போக்கை, தனது அடையாளம் குறித்த பிரக்ஞையற்ற புதிய தலைமுறையை அவர் எதிர்கொள்ள நேர்கிறது. கதையின்
போக்கில் செர்பியாவில் இன்றும் நிலவும் இனவிரோதப் போக்கும் பதிவாகிறது. பெருத்த வேதனையோடு தனது கடமையென எண்ணித் தன்னளவில் தனது மாணவர்கள் இருவரை உள்ளடக்கிய ஒரு சிறு குழுவைக்கொண்டு அவ்விசையை அரங்கேற்றுகிறார் மிசா !
இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்தும் இருக்கிறார் கோரன். மிசாவாக முஸ்தஃபா நடரேவிக் வாழ்ந்திருக்கிறார். படப்பிடிப்பு
முடிவதற்குள் பொருளாதாரம் உள்ளிட்ட எண்ணற்ற தடைகள். முஸ்தஃபா நடரேவிக்-கின்
மனைவிவேறு இறந்துவிட
அதனால் ஏற்பட்ட இரு மாதகால காலதாமதம், போதாததிற்கு பருவநிலை மாறுபாடு என்று ! ஆயினும்
அத்தனைப் பிரச்சனைகளையும் கடந்து இப்படம் கடமை உணர்வுடையவர்களால் உணர்வுப்பூர்வமான படமாக 2012-ல் வெளிவந்து உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது !
படம் முழுவதும் இசை பெருகி ஓடுகிறது கண்ணீராய், ஓலமாய், பேரழுகையாய்..! Quiet Film என்று கோரன் இதைச் சொன்னாலும், இன்றும் தொடரும் இனப்படுகொலைகளுக்கு எதிராக பேராழத்தில் புதைந்து போயிருக்கிற மானுடத்தின் மனசாட்சியை மீட்டெடுக்கக் கோருகிற ஒரு ஆகச்சிறந்த திரைக்காவியமாக இருக்கிறது கோரனின் இப்படைப்பு ! நாஜிக்களின்
‘soul suckers” டிரக்கில் ஆட்களை வரிசையாக
ஏற்றும் காட்சி நம் காலத்து ‘வெள்ளை வேன்’ களை நினைவூட்டாமலில்லை ! உயிர் பதைபதைக்காமலில்லை
!
‘’ஒரு நல்ல சினிமா என்பது நீங்கள் திரையரங்கில் அமர்ந்திருப்பதை மறக்கச் செய்ய வேண்டும்’’ என்பார் ரோமன் பொலான்ஸ்கி. When Day Breaks அப்படியானதொரு நல்ல திரைப்படைப்பு ! நன்றி.
நன்றி : கலகம்
