தன்மீது ஊறும் எறும்பை
பீதியோடு உணர்கிறது
அந்தக் குழந்தை பொம்மை.
கைகளின் மரத்தன்மை
அதனை வீறிடவைக்கிறது.
இமையற்ற அதன்
கண்ணுள் இறங்கி
கருவிழியைக் கடித்திழுக்கிறது
அச்சிற்றெறும்பு.
குழந்தையை எழுப்ப
குலைத்துக் குழைத்து
ஓய்கிறது அந்த நாய்பொம்மை . . .
நன்றி : கருக்கல்
நல்ல கவிதை. வலைப்பூ உலகத்துக்குள் உன்னை வரவேற்கிறேன் நண்பா. தொடர்ந்து எழுது.
ReplyDelete-இளங்கோ கிருஷ்ணன்
அருமை
ReplyDelete